உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் பகலில் எரியும் தெரு விளக்குகள்

 ராமேஸ்வரத்தில் பகலில் எரியும் தெரு விளக்குகள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் பல தெருக்களில் மின்விளக்குகள் பழுதாகி எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. ராமேஸ்வரம் மாங்காடு செல்லும் தார் ரோட்டோரத்தில் தெரு விளக்குகள் பகல், இரவு முழுவதும் எரிந்து கொண்டே இருக்கிறது. இரவில் மின்விளக்குகள் எரிவதால் மக்கள் பயனடையும் நிலையில் பகலில் யாருக்காக ஒளிர செய்கின்றனர். நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஆய்வு செய்வதும் இல்லை. இதனால் மின்சார இழப்பு ஏற்படுவதுடன் மக்கள் வரிப்பணத்தையும் நகராட்சி நிர்வாகம் வீணடிக்கிறது. எனவே துாங்கிக் கொண்டிருக்கும் நகராட்சி அதிகாரிகள் பகலில் எரியும் தெரு விளக்குகள், குடிநீர் வீணாகுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி