உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருமக்கள்

பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெருமக்கள்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜாகிர் உசேன் 2வது தெரு மக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு அதிகாரிடம் மனு அளித்தனர். முதுகுளத்துார் பேரூராட்சி ஜாகிர் உசேன் 2வது தெருவில் முதுகுளத்துார் பகுதியில் இருந்து பயன்படுத்தப்படும் கழிவு நீர் முழுவதுமாக வீடுகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பேரூராட்சி சார்பில் திறந்து விடப்படும் தண்ணீரும் முறையாக வருவதில்லை. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகுளத்துார் ஜாகிர் உசேன் 2-வது தெரு மக்கள் அடிப்படை வசதி வேண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பின் அதிகாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதை யடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ