உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலக ஆறுகள் தினத்தில் மாணவர் துப்புரவு பணி

உலக ஆறுகள் தினத்தில் மாணவர் துப்புரவு பணி

ராமேஸ்வரம் : உலக ஆறுகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அரசுப் பள்ளி என்.சி.,சி., மற்றும் என்.எஸ். எஸ்., மாணவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.நேற்று உலக ஆறுகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் துாய்மை இந்தியா திட்டத்தில் ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெருவில் பாலித்தீன் குப்பையை சேகரித்தனர்.இதில் அரசுப் பள்ளி முன்னாள் என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் ஜெயகாந்தன், பள்ளி என்.சி.சி., அலுவலர் பழனிச்சாமி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் செல்வகுமார், பள்ளி போலீஸ் கிளப் பொறுப்பு ஆசிரியர் லட்சுமணன் உட்பட ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !