உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் வெங்கலக்குறிச்சியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் ஹரிகார்த்திகேயன் 17, முதுகுளத்தூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முருகன் கோயில் அருகே புதிதாக வீடு கட்டி வருகின்றனர். வீட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்மோட்டார் பயன்படுத்தினர். அப்போது சுவிட்சை அணைக்காமல் மின் மோட்டாரை ஹரிகார்த்திகேயன் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ