உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை

ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் மாணவர் காயம்: பள்ளி முற்றுகை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பிரம்பால் தாக்கியதில் 9ம் வகுப்பு மாணவர் காயமடைந்தார். பெற்றோர், உறவினர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர்.தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் மீன் வியாபாரி பிராங்க்ளின். இவரது மகன் இங்குள்ள சந்தியா நகர் 'கிரைட்ஸ் தி கிங்' என்ற மெட்ரிக் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி கழிவறையில் சில மாணவர்கள் தகாத வார்த்தைகளை எழுதி உள்ளனர். இதுகுறித்து முதல்வர் ஷாலினி, ஆசிரியர்கள் விசாரித்தனர். இந்நிலையில் அக்., 24ல் பள்ளி ஆசிரியர்கள் பிராங்க்ளின் மகனை பிரம்பால் தாக்கினர். இதில் மாணவரின் கை, முதுகில்காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் முதல்வரிடம் முறையிட சென்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்கவில்லை எனக்கூறி பிராங்க்ளின் நேற்று தங்கச்சிமடம் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து நேற்று மாலை உறவினர்களுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி தலைமையில் போலீசார் சமரசம் செய்தும் பலனில்லை. இதனால் நேற்று இரவு வரை பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்திருந்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !