மாணவிக்கு தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.மண்டபத்தைச் சேர்ந்த ரவி மகன் பாலசந்தர் 19. இவர் 2022ல் அப்பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவியை (தற்போது கல்லுாரியில் படிக்கிறார்) கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவியின் பெற்றோர் புகாரில் போக்சோ சட்டத்தில் மண்டபம் போலீசார் விசாரித்து பாலசந்தரை கைது செய்தனர்.இவ்வழக்கு ராமநாதபுரம் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா வாதிட்டார். பாலசந்தருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.