மேலும் செய்திகள்
திருவாடானை ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை தீவிரம்
09-Mar-2025
சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸில் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளது.இதையடுத்து பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் சாயல்குடி போஸ்ட் ஆபீஸ் சென்று புதியதாக சேமிப்பு கணக்கு துவங்குவதற்காக விண்ணப்பங்களை பெற்று அவற்றை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உடனடியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய இயலாமல் அதிகளவு குவிந்து வருவதால் பணிச்சுமையால் அஞ்சலக ஊழியர்கள் திணறுகின்றனர்.பள்ளி மாணவரின் பெற்றோர் சாயல்குடியைச் சேர்ந்த ராஜபாண்டியன் கூறியதாவது:பள்ளிகளில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் வேலை நேரங்களில் வந்து சென்று பதிவேற்றம் செய்வதற்காக வருகின்றனர்.இந்நிலையில் அடுத்த வாரம் வாருங்கள், பத்து நாள் சென்று வாருங்கள் என தொடர்ந்து அங்குள்ள பணியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உடனடியாக போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு துவங்கிய அந்த கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும் என பள்ளியில் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.அடிக்கடி போஸ்ட் ஆபீஸில் சென்று முழு நேரத்தையும் செலவிட்டாலும் பணிகள் நடப்பது இல்லை. எனவே கோட்ட அஞ்சல் துறை அலுவலர்கள், கூடுதல் பணியாளர்களை நியமித்து பள்ளி மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு துவங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
09-Mar-2025