உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடிதம் எழுதும் போட்டியில்  மாணவர்கள் பங்கேற்கலாம்

கடிதம் எழுதும் போட்டியில்  மாணவர்கள் பங்கேற்கலாம்

ராமநாதபுரம்: அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் சார்பில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில் 9 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் 9 முதல் 15 வயது இளம் தலைமுறையினர் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கடிதங்களை எழுதி பரிசுகளை வெல்ல ஊக்குவித்து வருகிறது.இதன்படி 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் 'உங்களை கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்என்பதை ஒருவருக்கு கடிதமாக எழுதுங்கள்'. கடிதம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் மேற்கண்ட தலைப்பில் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதலாம். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பான முதல் மூன்று கடிதங்கள் தமிழ்நாடு வட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இந்திய அளவில் முதல் சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். தமிழக அளவில் முதலிடம் ரூ.25ஆயிரம், 2ம் இடமிடம் ரூ.10 ஆயிரம், மூன்றாமிடம் ரூ.5000 மற்றும் இந்திய அளவில் முதலிடம் ரூ.50 ஆயிரம், 2ம் இடம் ரூ.25 ஆயிரம், 3ம் இடம் ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. தேசிய அளவில் முதல் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கடிதம் இந்தியா சார்பில் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும்.பின்னர் உலக அளவில் முதல் இடம் பெறும் கடிதத்தை எழுதிய பங்கேற்பாளர் சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கவுரவிக்கப்படுவார். மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் வணிக மேலாளரை 94431 39982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் (பொ) மாரியப்பன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி