மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு
03-Nov-2024
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மாணவர்கள் இருவர் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான 'கட்கா' போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் தற்காப்பு கலையான 'கட்கா' போட்டி வாள், கேடயம் போன்ற அமைப்புடன் கம்பு சண்டை போன்று விளையாடக்கூடியது. ஒற்றையர், இரட்டையர் விளையாட்டுகளாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் இது பயிற்றுவிக்கப்படுகிறது.கடந்த மாதம் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் இந்திய பள்ளிகளின் விளையாட்டுக் குழுமம் நடத்திய மாநில அளவிலான கட்கா தேர்வு போட்டிகள் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர் என்.சக்தி முனீஸ்வரன் பிரபாகரன், முதுகுளத்துார் கொழுந்துரை கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவயோகேஷ் ஆகியோர்தேர்வு பெற்றனர். இவர்கள் டில்லியில் டிசம்பரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கட்கா பயிற்சியாளர் திருமுருகன், நகசோன், தமிழ்நாடு அமெச்சூர் கட்கா வெல்பேர் அசோசியேஷன் தலைவர் சோலை, பொதுச் செயலாளர் மாங்க் பிரசாத், தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
03-Nov-2024