| ADDED : டிச 10, 2025 08:53 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் பிரிவில் சிறந்து விளங்க 'ஸ்டெம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கல்விச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். நடப்பு ஆண்டில் இத்திட்டத்தில் 294 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 அரசு பஸ்களில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி கொடியசைத்து அனுப்பி வைத்தார். காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி மையம், அறிவுப் பூங்கா ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். மரைக்காயர்பட்டினம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையம், கடல் உப்பு மற்றும் அரிப்பு ஆராய்ச்சி மையம், புதுமடம் மதுரை காமராசர் பல்கலை., கடலோர படிப்பு மையத்தை பார்வையிட்டனர். இந்து சுற்றுலா பயணத்தில் அறிவியல் ஆய்வகத்தின் பயன்பாடு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.