உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசுப்பள்ளியில் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளியில் நாற்காலியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்

திருவாடானை; அரசு தொடக்கப்பள்ளிக்கு 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தில் வழங்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்தில் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த எழுதும் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து திருவாடானை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் கூறியதாவது: அரசு தொடக்கப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு தேவையான வசதிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தன்னார்வ பணிகள் மூலமாகவும், கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமாகவும் இத் திட்டத்திற்கு நிதி பங்களிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை