உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கமுதியில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கமுதி; கமுதி போலீஸ் ஸ்டேஷன் அருகே புதிய சார்பதிவாளர் அலுவலகம் ரூ.1.86 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து காணொளி காட்சி யில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின் சார்பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கு ஏற்றினார். கட்டடத்தின் உட்கட்டமைப்பை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். உடன் துணை பதிவுத்துறை தலைவர் லதா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் குருதிவேல்மாறன், மாவட்ட பதி வாளர் ரமேஷ், சார்பதிவாளர் ஜானகி, கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பெருநாழியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை