மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
19-Aug-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜைநடந்தது. வழுதுார் அருளொளி விநாயகர் கோயிலில் 58ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆக.,18ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.ஏராளமானோர் பால்குடம் எடுக்க காப்பு கட்டிக்கொண்டனர்.பத்து நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதனை அழகன்குளம் பிரேமா குழுவினர்கள் நடத்தினர்.உலக நன்மை வேண்டியும், அதிக மழை பெய்து விவசாயம்செழிக்கவும், குடும்பத்தில் கல்வி செல்வம் பெருகவும், இளம் பெண்கள் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமைய கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
19-Aug-2025