உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை

கோடை மழை: மிளகாய் விவசாயிகள் வேதனை

கீழக்கரை : கீழக்கரை தாலுகா பி.மோர்க்குளம், களரி, கொம்பூதி, சுமைதாங்கி, மேலமடை, கருக்காத்தி, பனையடியேந்தல், மரியராயபுரம், நல்லிருக்கை, ஆலங்குளம், உத்தரகோசமங்கை, மல்லல் உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை சேகரிக்கும் வேலையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்ட நிலையில் கோடை மழையின் தாக்கத்தால் சேதத்தை சந்திக்கின்றனர்.தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கீழக்கரை தாலுகா பொறுப்பாளர்கள் முத்துராமன், பழனிச்சாமி, மயில்வாகனன் கூறியதாவது:இப்பகுதியில் 5000 எக்டேருக்கு அதிகமாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மிளகாய் பழங்களை சேகரித்து உலர வைத்து வரும் நிலையில் மழையால் விவசாயிகள் பாதிககப்பட்டுள்ளனர்.மிளகாய் பறிக்கும் விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் செடிகள் கீழே விழுகிறது. ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளோம். எனவே பாதிப்பை சந்தித்த மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி