உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்களுக்கான அபராதத்தை உயர்த்தியது இலங்கை அரசு: தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

மீனவர்களுக்கான அபராதத்தை உயர்த்தியது இலங்கை அரசு: தமிழக மீனவர்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் : இலங்கையில் கைதாகும் மீனவர்கள் படகிற்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணத் தொகை அறிவித்த நிலையில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கான அபராதத்தை உயர்த்தி இலங்கை அரசு அதிர்ச்சியளித்துள்ளது.ராமேஸ்வரம் முதல் நாகை மாவட்டம் வரை உள்ள கடலோர பகுதியில் மீனவர்கள் விசைப்படகு, நாட்டுப்படகில் மீன் பிடிக்கின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறை பிடிக்கின்றனர். படகுகள், மீனவர்களை விடுவிக்க தமிழக மீனவர்கள் போராடுகின்றனர். இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி பிடிபடும் படகிற்கு ரூ.6 லட்சமாக இருந்த நிவாரணத்தை தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தியும், சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கான நிவாரணம் ஒரு நாளுக்கு ரூ.350 பதிலாக ரூ.500 வழங்கவும் மார்ச் 5ல் தமிழக அரசு உத்தரவிட்டது.இதனால் ஆவேசமடைந்த இலங்கை மீனவர்கள், 'நிவாரணத்தை உயர்த்தியுள்ளது, எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தமிழக அரசு ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது.எனவே நீதிமன்றம் மீனவர்களுக்கு விதிக்கும் அபராதத் தொகையை உயர்த்த வேண்டும் எனக் கோரி போராட்டம் செய்தனர்.இதன் எதிரொலியாக இதுவரை ரூ.50 ஆயிரம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்த அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.மார்ச் 7ல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராத உயர்வால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ