உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி யூனியன் அலுவலகம் முன்பு நேற்று மதியம் 3:00 மணிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வட்டார அளவிலான ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் நலச் சட்டத்திற்கு எதிராகவும் அறிவித்துள்ள வாரம் 7 நாள் வேலையையும், தினந்தோறும் காலை 7:00 மணிக்கு கள ஆய்வையும் நிறுத்த வலியுறுத்தி மாநில அளவில் வட்டாரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நர்கீஸ் பானு, சுகன்யா, தனலட்சுமி, செல்வராணி, அனிதா உள்பட பலர் பங்கேற்றனர். ஞாயிறு விடுமுறை, ரூ.160 அன்றாட கூலிக்கு தினசரி 4:00 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும். அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை சேகரிக்க மாட்டோம். தள்ளுவண்டி மற்றும் மூன்று சக்கர வண்டிகளில் குப்பை சேகரிக்க மாட்டோம். போதுமான பேட்டரி வண்டிகளை வழங்கவும், வழங்கிய வண்டிகளுக்கு பராமரிப்பு மற்றும் பழுதுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை