உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு நீர் நிலைகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு; தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி அறிவுரை

மாணவர்களுக்கு நீர் நிலைகள் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு; தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி அறிவுரை

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நீர் நிலைகள் விழிப்புணர்வு குறித்து பள்ளிகளில் தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி மாணவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பெரும்பாலான கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் கண்மாய், குளங்கள் முழுவதும் நிரம்பி உபரி நீர் கலுங்கு வழியாக வெளியேறுகிறது.இந்நிலையில் ஆழம் தெரியாமல் கண்மாய், ஊருணிகளில் இறங்கி குளிக்கும் போது மூச்சுத் திணறி உயிர் பலி ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த ஆண்டு நெய்வயல், அணிக்கி, அத்தாணி கண்மாய்களில் இருவர் ஒரே நாளில் இறந்தனர்.திருவாடானை அருகே அழகமடை கண்மாயில் தாயும், மகளும் இறந்தனர். நவ.12 ல் தொண்டி அருகே பாசிபட்டினத்தில் இரு மாணவிகள் இறந்தனர். நீர் நிலைகளுக்கு சென்று மீன்பிடிப்பது, ஆழம் தெரியாமல் குளிப்பது போன்ற சம்பவங்களால் ஆண்டு தோறும் பலி அதிகமாகிறது.ஆபத்தான கண்மாய், ஊருணிகளுக்கு முன்னெச்சரிக்கை போர்டு வைப்பது போன்ற விழிப்புணர்வுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எடுக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருவாடானை தாலுகாவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் தினமலர் நாளிதழை சுட்டிக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பாசிபட்டினத்தில் பள்ளி மாணவிகள் இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மாணவிகளின் உடல்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். தினமலர் நாளிதழில் நீர் நிலைகள் விழிப்புணர்வு குறித்து அடிக்கடி செய்தி வெளியாகிறது.அந்த செய்தியை சுட்டிக்காட்டி திருவாடானை ஒன்றியத்தில் உள்ள 113 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பதே குறிக்கோள் என நீச்சல் தெரியாமல் நண்பர்களோடு இணைந்து குளிக்கின்றனர்.குறிப்பிட்ட ஆழத்திற்கு செல்லும் போது தப்பிக்க வழியின்றி மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் நீர் நிலைகளால் ஏற்படும் விபத்தை நிச்சயம் தடுக்க முடியும்.இதுபோன்ற முயற்சிகள் எடுக்கும் போது மாவட்ட அளவில் சிறுவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை