உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தொழிநுட்ப பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் அலுவலர் தமிழ் அகராதி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் முனியசாமி, உதவி வேளாண் அலுவலர் சுபதர்ஷினி முன்னிலை வகித்தனர். இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், உரங்கள், இயற்கை முறையில் பருத்தி சாகுபடி குறித்து விளக்கப்பட்டது.வேளாண் துறையில் உள்ள மானியங்கள், திட்டங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கிப் பேசினர். அப்பனேந்தல், கேளல், அ.நெடுங்குளம், அ.நாகனேந்தல் பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை