| ADDED : ஜன 30, 2024 11:17 PM
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற வராகி அம்மன் கோயில் உள்ளது.தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மூலவர் வராகி அம்மனுக்கு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டைகளாக நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர்.பெண்கள் தேங்காய், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவைகளில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.