மேலும் செய்திகள்
வயிற்று வலி: மூதாட்டி தற்கொலை
26-Aug-2025
திருவாடானை: தேவகோட்டை பகுதியில் மாயமான மூதாட்டி உடல் திருவாடானை அருகே கண்மாயில் மீட்கப் பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருப்பாக்கோட்டை கீழகுடியிருப்பை சேர்ந்தவர் ராசாத்தி 70. வீட்டிலிருந்த இவர் செப்.,10ல் மாய மானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் உள்ள கண்மாயில் பெண் உடல் கிடைப்பதாக தகவல் கிடைத்தது. திருவாடானை இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். உடல் அருகே களைக்கொல்லி மருந்து டப்பா கிடந்ததால் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. மற்ற மாவட்ட போலீசாருக்கு தெரிவிக்கபட்டது. தேவகோட்டை போலீசார் அது ராசாத்தி உடல் என்பதை உறுதி செய்தனர். போலீசார் கூறுகையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட ராசாத்தி தற்கொலை செய்துள்ளதாக தெரி வித்தனர்.
26-Aug-2025