உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு

ஏர்வாடி தர்காவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடி இறக்கத்துடன் நேற்று நிறைவடைந்தது.ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது. ஏப்., 29ல் மவுலீது எனப்படும் புகழ் மாலையுடன் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்பட்டு வந்தது. மே 9ல் கொடியேற்றம் நடந்தது.மே 21 இரவு துவங்கி மறுநாள் மே 22 வரை சந்தனக்கூடு விழா நடந்தது. நேற்று மாலை 5: 45 மணிக்கு ஏர்வாடி தர்கா முன்புறமுள்ள 80 அடி உயர கொடி மரத்தில் ஏற்றப்பட்ட பச்சை வண்ணப் பிறைக்கொடி உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டவுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டது.பாதுகாப்பாக இறக்கப்பட்ட கொடி பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.கொடி இறக்கத்தை முன்னிட்டு ஏர்வாடி தர்கா மற்றும் மூன்று இடங்களில் காலை முதல் இரவு வரை நெய் சோறு அன்னதானமாக வழங்கப்பட்டது.அனைத்து சமுதாய மக்களுக்கும் 17 ஆயிரம் பனை ஓலை பெட்டியில் நெய்ச்சோறு வைக்கப்பட்டு பார்சலாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் சித்திக் லெவ்வை, உதவி தலைவர் முகம்மது சுல்தான் மற்றும் ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். கொடி இறக்க நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ