உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிப்பு

பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்த நிலையில் மாணவர்கள் ஒரே வகுப்பறையிலும், வளாகத்திலும் அமர வைக்கப்பட்டதால் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் மகளிர் உரிமைத் தொகை, மருத்துவக் காப்பீடு என பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெற்றனர். இதனால் இரு வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மாற்று வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். இடவசதி இல்லாததால் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை