வெளிச்சம் கொடுத்தது உயர் கோபுர விளக்கு
சாயல்குடி: சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டியில் கடந்த ஆறு மாதங் களாக உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருந்தது. கொண்டுநல்லான்பட்டி யில் 3000 பேருக்கும் அதிக மானோர் வசிக்கின்றனர். இங்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு ஆறு மாதமாக எரியாமல் காட்சி பொருளாகவே இருந்தது. தற்போது தனி அலுவலர் களின் மூலமாக ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முறையான பரா மரிப்பு பணி களுக்கு கூட தொகை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதாக ஊராட்சி செயலர்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செப்., 23ல் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் கிராமத்தில் உயர் கோபுர மின் விளக்கு வெளிச்சம் தந்தது. தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரி வித்தனர்.