உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்

அரசு பெண்கள் பள்ளியில் புதர் மண்டிய வளாகம்

திருவாடானை; திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செடிகள் அடர்ந்து புதர் மண்டி இருப்பதால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை பாரதி நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் செடிகள் அடர்ந்து புதர் மண்டியுள்ளது. பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டி செடிகள் அடர்ந்து புதராக உள்ளது. இதனால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காம்பவுண்டு கதவு திறந்திருக்கும் வேளையில் ஆடு, மாடுகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. பள்ளியில் மண்டியிருக்கும் புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !