உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

காட்சிப்பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சாயல்குடி, : -சாயல்குடி அருகே பெரியகுளம் ஊராட்சியில் ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி காட்சிப்பொருளாக உள்ளது. பெரியகுளம் ஊராட்சி சீனிநாதபுரத்தில் நபார்டு வங்கி திட்டத்தில் 10 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தில் அமைக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு இதுவரை காவிரி குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளதால் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. எனவே பெரியகுளத்திற்கு காவிரி குடிநீர் இணைப்பை முறையாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ