உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றவர் நீரில் மூழ்கி பலி

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றவர் நீரில் மூழ்கி பலி

வாலிநோக்கம், :ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பலியானார்.வாலிநோக்கம் அருகே திருவரங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சி குமார் 45. இவருக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். திருவரங்கை கண்மாய் கரை அருகே உள்ள தரைமட்ட கிணற்றில் செம்மறி ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதனைப்பார்த்த பூச்சி குமார் ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பூச்சிகுமார் உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.வாலிநோக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ