உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் பொதுமக்கள் பாதிப்பு

பரமக்குடியில் வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் பொதுமக்கள் பாதிப்பு

பரமக்குடி, - -தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பரமக்குடியில் நடந்து வரும் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் 10 அம்சச கோரிக்கைகளை முன்னிறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி பிப்.13ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், பிப்.22ல் துவங்கி 2ம் கட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து 5 நாட்கள் வரை பணி புறக்கணிப்பு செய்தனர்.தொடர்ந்து பிப்.27ல் தொகுதி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வருவாய் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆன்லைன் பணிகள், பட்டா, ஓ.ஏ.பி., ரேஷன் கார்டு, மாணவர்களுக்கான முதல் பட்டதாரி சான்றிதழ், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ்வழங்குதல், தேர்தல் பணிகள் உட்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தால் தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகங்கள் பூட்டப்பட்டுஉள்ளது. பொதுமக்கள் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.பரமக்குடி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்தாசில்தார் சாந்தி, வட்ட கிளை தலைவர் காதர் முகைதீன் உட்பட 70-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை