மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., மாவட்ட மாநாடு
09-Jul-2025
ராமநாதபுரம்;-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலெக்டரால் நியமிக்கப்படும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட நிரந்த பணியிடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கிராம ஊராட்சியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முனியசாமி, மாவட்ட ஆலோசகர் தினகரன், மாவட்ட துணை செயலாளர் நவீன்குமார் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜன், மாநிலக்குழு உறுப்பினர் தர்மராஜன் பேசினர். மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
09-Jul-2025