உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாடத்திட்டம், புத்தகம், ஆசிரியர் இல்லை தேர்வு மட்டும் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை

பாடத்திட்டம், புத்தகம், ஆசிரியர் இல்லை தேர்வு மட்டும் நடத்தும் பள்ளிக்கல்வித்துறை

ராமநாதபுரம்:தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி குறித்த பாடத்திட்டம், புத்தகம், ஆசிரியர் என எதுவுமே இல்லாத நிலையில் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6, 7, 8 ம் வகுப்புகளுக்கு நேற்று உடற்கல்வி தேர்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. 90 சதவீதம் நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. உடற்கல்விக்கு என எந்த பாடத்திட்டம், பாடப்புத்தகம் இல்லை. ஆனால் ஆண்டு தோறும் தேர்வை மட்டும் பள்ளிக்கல்வித்துறை தவறாமல் நடத்தி வருகிறது.பெற்றோர் தரப்பில் கூறியதாவது: விளையாட்டில் சிறு வயது குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் உடற்கல்வித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.ஆனால், அதற்கான பாடத்திட்டம், ஆசிரியர்கள் இல்லாமல் தேர்வு நடத்துவது எந்த வகையில் நியாயம்.இந்நிலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தெரியுமா. இனியாவது உடற்கல்வித்துறைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை