உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டை மறைக்கும் சீமைக் கருவேலம்

ரோட்டை மறைக்கும் சீமைக் கருவேலம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம் ஊராட்சி தெருக்களின் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலையோரம் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் வீடுகளை சுற்றிலும் விஷ ஜந்துக் களின் நடமாட்டம் அதி களவு உள்ளது. கோரைக்குட்டம் ஊராட்சி தனி அலு வலர் ஊராட்சியின் அத்தியாவசிய பணிகளில் அக்கறை செலுத்தாமல் உள்ளார். இதனால் பெருவாரியான சீமைக் கருவேல மரங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவே உள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலமாக முள் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ