உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தடுப்பு சுவரின்றி மூழ்கியது ஊருணி ரூ.40 லட்சம் வீண்

தடுப்பு சுவரின்றி மூழ்கியது ஊருணி ரூ.40 லட்சம் வீண்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் தடுப்பு சுவரின்றி அமைத்த ஊருணி கனமழையில் மூழ்கியதால் ரூ. 40 லட்சம் வீணாகியது. மண்டபம் கலைஞர் நகரில் டிச.,ல் அம்ருத் திட்டத்தில் ரூ. 40 லட்சத்தில் மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் ஊருணி அமைத்தது. இந்த ஊருணியில் இரு இடத்தில் படிக்கட்டுகள் தவிர தடுப்புச் சுவர் ஏதும் அமைக்கவில்லை. தாழ்வான இப்பகுதியில் ஊருணி அமைக்க பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகள் அவசரகதியில் ஊருணி அமைத்தனர் . இதனால் அக்., 20ல் பெய்த கனமழையால் வீடுகளை மழைநீர் சூழ்ந்த நிலையில் ஊருணியும் தண்ணீரோடு மூழ்கியது. தற்போது ஊருணி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊருணிக்கு கரை மற்றும் தடுப்புச் சுவர் அமைத்து பாதுகாக்க இப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தற்போது மக்களின் வரிப்பணம் ரூ. 40 லட்சம் வீணாகிப் போனது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை