டாஸ்மாக் கடையில் திருட்டு
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு மயான பகுதியை ஒட்டி உள்ள இடத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் இரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த 600 மதுபாட்டில்களை திருடியுள்ளனர். கடையின் சூப்பர்வைசர் எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்த சேகர் புகாரில் திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.