வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மாதத்தில் வளர்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து அம்மனுக்கு வழங்குகின்றனர்.முன்னதாக மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கனிகள், கிழங்கு வகைகள், பட்டுப் புடவைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.