உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உலர்களம் வசதி இல்லாததால் ரோட்டில் பயிர்கள் உலர வைப்பு விபத்து அபாயம்

உலர்களம் வசதி இல்லாததால் ரோட்டில் பயிர்கள் உலர வைப்பு விபத்து அபாயம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உலர்களம் வசதி இல்லாததால் விவசாயிகள் வேறுவழியின்றி ரோட்டில் சிறுதானிய பயிர்களை பிரித்து எடுப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார் அருகே கீழத்துாவல், விளங்குளத்துார், உடைகுளம், மகிண்டி, நல்லுார்,செல்வநாயகபுரம் கமுதி அருகே பேரையூர், மருதங்கநல்லுார், கருங்குளம், பாக்குவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சிறுதானிய பயிர்களான உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். தற்போது சிறுதானிய பயிர்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் உலர்களம் வசதி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதனால் முதுகுளத்துார்- -பரமக்குடி ரோடு, - கமுதி ரோடு, -அபிராமம் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் ஆபத்தை உணராமல் விவசாயிகள் ரோட்டில் சிறுதானிய பயிர்களை உலர வைத்து பிரித்தெடுக்கப்படுகின்றனர்.இதனால் ஏதாவது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலர்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ