உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேவர் குருபூஜை:  வாகனங்களில் வருவதற்கு கட்டுப்பாடுகள்

தேவர் குருபூஜை:  வாகனங்களில் வருவதற்கு கட்டுப்பாடுகள்

ராமநாதபுரம்: பசும்பொன் முத்து ராமலிங்கதேவர் 118வது பிறந்தநாள் விழா, 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாத புரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் பேசியதாவது:

பசும்பொன் நிகழ்ச்சி களில் பங்கேற்போர் வாடகை வாகனங்கள், டூவீலர், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனங் களில் வருவதை தவிர்க்க வேண்டும். கார்களில் வருபவர்கள் சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். வாகனங்களில் ஒலி பெருக்கி, பேனர், பொருத்தக் கூடாது. கூரை மேல் அமர்ந்து பயணிக்க கூடாது. வரும் வழியில் வெடி போடுவதை தவிர்க் வேண்டும். அக்.29, 30 தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப் படும். பசும்பொன் பஸ்சில் செல்ல விரும்புவோர் முன்னதாக மனு அளிக்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை