கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்
திருப்புல்லாணி, : திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து யூனியன் அலுவலர்கள் பங்கேற்றனர். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வந்தனர்.மதிய உணவு இடைவேளையில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் துணை பி.டி.ஓ., ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.