மேலும் செய்திகள்
நுாறு நாள் வேலை வழங்க கிராம மக்கள் வலியுறுத்தல்
25-Jun-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் திம்மாபட்டி கிராமத்திற்கு காவிரி குடிநீர் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.திம்மாபட்டி காலனி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதில், எங்கள் ஊரில் கிணற்று நீர், ஊருணி நீர் என எதுவும் இல்லை. முழுமையாக காவிரி குடிநீரை நம்பியுள்ளோம். இந்நிலையில் தேவிபட்டினம் ரோட்டில் குழாய் சேதமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குடிநீர் வராமல் மிகவும் சிரமப்படுகிறோம்.எனவே உடனடியாக குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் குழாயை சீரமைத்து தினந்தோறும் குடிநீர் வழங்க வேண்டும். அதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
25-Jun-2025