/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நயினார்கோவிலில் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் வைபவம்
நயினார்கோவிலில் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் வைபவம்
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி, நாகநாத சுவாமி கோயில் வைகாசி வசந்த விழா நடக்கிறது. விழாவில் குழந்தையான திருஞான சம்பந்தருக்கு பார்வதி தேவி பாலுாட்டும் வைபவம் நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த கோயிலில் மே 31 காலை நந்தி கொடி ஏற்றப்பட்டு விழா நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிவலம் வருகின்றனர். நேற்று காலை 6ம் திருநாளில் திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டல் வைபவம் நடந்தது. காலை இந்திர விமானத்தில் நடராஜர் புறப்பாடு நடந்தது.திருமுறை பட்டயம் வாசித்தல் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திரு உடல் தீர்த்தல் நிகழ்வு நடக்கிறது. ஜூன் 8 காலை 9:00 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வருகின்றனர். ஜூன் 12 உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.