உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாற்றாண்டு கொண்டாடும் திருவாடானை பள்ளிகள்

நுாற்றாண்டு கொண்டாடும் திருவாடானை பள்ளிகள்

திருவாடானை; திருவாடானை அரசு தொடக்கப்பள்ளி, என்.எம்.மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்துள்ளதால் திருவிழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 100 ஆண்டுகளை கடந்துள்ள பள்ளிகளில் விழாவாக கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாடானை தாலுகாவில் திருவாடானை அரசு தொடக்கப்பள்ளி, என்.எம். மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவின் போது இந்த இரு பள்ளிகளிலும் நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும். இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வகுத்துள்ளது.விழாக்குழு சார்பில் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்கும் நுாற்றாண்டு விழா குறித்து தெரிவிக்கப்படும்.தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். விழாவில் நுாற்றாண்டு சுடர், உறுதிமொழி, இதுவரை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், மாணவர்கள் பெற்ற விருதுகள் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை