உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி பேரூராட்சி கூட்டம்

தொண்டி பேரூராட்சி கூட்டம்

தொண்டி : தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது. துணைதலைவர் அழகுராணி, செயல் அலுவலர் திருப்பதி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.துாய்மை இந்தியா திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மின்தகன மேடை அமைக்க அரசு புறம்போக்கு நிலம் தேவைப்படுவதால் அந்த இடத்தை தேர்வு செய்து தர தாசில்தாரை கேட்டுக்கொள்வது, பெருமானேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்தி உரிய மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.தொண்டியில் குடியிருப்புகள் பெருகிவிட்டதால் மின் தேவை அதிகரித்துள்ளது. எனவே 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி அமைக்க மின்வாரியத்தை வலியுறுத்துவது, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கவேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை