கொடிக்கம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் காயம்
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா, 63 வது குருபூஜை விழா இன்று (அக்.30ல்) நடக்கிறது. பசும்பொன் அருகே பா.ஜ., சார்பில் நேற்று மாலை கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது கொடிக்கம்பம் சாய்ந்தது. மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கருப்பணன் 29, தஞ்சாவூர் மாவட்டம் ரவி 40, சரவணன் 38, துாக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். மூவரையும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கருப்பணன் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.