உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று தனிப்படை அமைப்பு 

மூன்று தனிப்படை அமைப்பு 

ராமநாதபுரம்: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமனுார் கிராமத்தில் ஒரு தரப்பினர் போர்டு வைத்த நிலையில் நேற்று காலை மற்றொரு தரப்பினர் அகற்றக் கூறினர். இதனால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் ஒரு தரப்பினரும், நயினார் கோவில் விலக்கு ரோடு மற்றும் பர்மா காலனி பகுதியில் மற்றொரு தரப்பினரும் ரோடு மறியல் செய்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சிலர் நின்றிருந்த இரு அரசு பஸ்கள், மூன்று கார்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.இது தொடர்பாக சத்திரக்குடி போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரின் 7 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !