அரிசிக்கு வரிவிலக்கு அளிக்க வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை
ராமநாதபுரம்: சப்பாத்திக்கு வரி விலக்கு அளித்த நிலையில் அரிசிக்கு வரி விலக்கு அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன் தெரிவித்தார். அவர் கூறிய தாவது: ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என வணிகர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி குறையும். ஜி.எஸ்.டி., குறைந்த பொருட்கள் விலையை குறைத்து விற்க வேண்டும் என அனைத்து வணிகர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. விலை குறைவின் காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க் கிறோம். பால், தயிர், முட்டை, காய்கறிகள், பழங்கள், உள்ளிட்டவைக்கு வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது. சப்பாத்திக்கு வரி விலக்கு அளித்த நிலையில் அரிசிக்கு 26 கிலோவுக்கு மேல் வாங்கினால் தான் வரி விலக்கு என்கின்றனர். சாமானிய மக்கள் பெரும்பாலும் சில்லரை அளவில் தான் அரிசி வாங்குவர். அதனால் 25 கிலோவுக்கு கீழ் வாங்கும் அரிசிக்கு வரிவிலக்கு வேண்டும். அது போல் புண்ணாக்கு, கடலை மிட்டாய்க்கு வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்தால் விலைவாசி குறையும்.சர்க்கரை நோய், காசநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.இந்த மாற்றத்தால் ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத சிறு வியாபாரிகளுக்கு மட்டும் நஷ்டம் ஏற்படும். மற்ற வணிகர் களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்படாது என்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் தலைவர் தரணி முருகேசன், ராமநாதபுரம் வர்த்தக சங்க செயலாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.