மேலும் செய்திகள்
மழை வெள்ளத்தில் தப்பிக்க தீயணைப்பு துறை விளக்கம்
16-Oct-2024
சாயல்குடி : சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், கன்னிராஜபுரத்தில் உள்ள சத்திரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.முதலுதவி செய்தல் வெள்ள காலங்களில் எவ்வாறு தப்பிப்பது மற்றும் பாதுகாப்பான முறையில் செயல் விளக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
16-Oct-2024