பயிற்சி பட்டறை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மேலாண்மைத்துறை சார்பில் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். மேலாண்மைத்துறை தலைவர் மெய்கண்ட கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் ஆசிஷ் விஸ்வநாத் பிரகாஷ் பங்கேற்று வணிக பகுப்பாய்வின் பயன்பாடுகள் குறித்த பயிற்சி மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார். பேராசிரியை மேனகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் ஜெயபாலன், பணியாளர்கள் செய்தனர்.