உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது 

ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது 

ராமநாதபுரம்: போக்குவரத்துக்கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் சார்பில் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.போக்குவரத்து ஊழியர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வு ஊழியர்களின் 10 ஆண்டு கால அகவிலைப்படியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு., ஊழியர்கள், ஒய்வு பெற்றோர் நல அமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் பணிமனை முன்பு நடந்த மறியலில் மத்திய சங்கத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராஜன், முன்னாள் தலைவர் கேசவன், சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், அய்யாத்துரை, மாவட்ட செயலாளர் சிவாஜி உட்பட 86 பேர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மகாலில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை