மேலும் செய்திகள்
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
16-Apr-2025
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தில் ராமநாதபுரம் டூ பரமக்குடி நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் ரூ.1 கோடியில் நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு அதனை ஓராண்டு பராமரிக்க உள்ளனர்.ராமநாதபுரம் வனத்துறை சார்பில் உயிர் பண்ணை, பசுமையாக்கல் திட்டத்தில் ஆண்டு தோறும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவை வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் நெடுஞ்சாலைகள், கண்மாய்கள், ஊருணிகளின் கரைப் பகுதிகளில் நடப்படுகின்றன. மேலும் 2024-25ம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தில் ராமநாதபுரம் வனத்துறை மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாதபுரம் - பரமக்குடி நான்கு வழிச்சாலை வரை 10 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி பரமக்குடியில் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா தலைமையில் நான்கு வழிச்சாலையில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை எம்.எல்.ஏ., முருகேசன் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஓராண்டு வரை மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், எங்களது நர்சரியில் தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தில் 8 அடி முதல் 10 அடி உயரமுள்ள சாலையோரம் நிழல் தரும் புங்புகன், வேம்பு, புளி உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அவற்றை பரமக்குடியில் துவங்கி ராமநாதபுரம் வரை சாலையோரம் பாதுகாப்பு வேலியுடன் நடும் பணி நடக்கிறது. இவற்றை தொடர்ந்து பராமரிக்க வாட்ச்சர்கள் நியமிக்கப்பட்டு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது என்றார்.----
16-Apr-2025