மேலும் செய்திகள்
பாரதிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மாநாடு
18-Sep-2025
பரமக்குடி; பரமக்குடி காந்தி சிலை முன் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த நாளையொட்டி அஞ்சலி செலுத்தினர். சங்க மாநில ஒருங் கிணைப்பாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். நிர்வாகி நாராயணன், கவுரவ ஆலோசகர் கிருஷ்ணன், சங்கரன் முன்னிலை வகித்தனர். அப்போது காந்தியடிகள், லால் பகதுார் சாஸ்திரி, தினமலர் தேசிய தமிழ் நாளிதழ் நிறுவனர் எல்லை போராட்ட வீரர் டி.வி.ராமசுப்பையர், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரின் பிறந்த நாள் மற்றும் காமராஜ் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்தினர். காங்., செயற்குழு உறுப்பினர் ஜோதிபாலன், ஆனந்தகுமார், பரமக்குடி எல்.ஐ.சி., ஊழியர்கள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், வக்கீல் சரவண காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இளைஞர் ஜனதா தள இலவச வாசகசாலை சார்பில் தலைவர் நாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் ராமதாஸ், சேகர், பாஸ்கரன், வரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
18-Sep-2025