திரிபுரா கவர்னர் சுவாமி தரிசனம்
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திரிபுரா மாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி சுவாமி தரிசனம் செய்தார்.நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த திரிபுரா கவர்னர் இந்திர சேனா ரெட்டியை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளீதரன், கோயில் பேஸ்கார் கமலநாதன் வரவேற்றனர். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் கவர்னர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின் கோயில் குருக்கள் கவர்னருக்கு பிரசாதம் வழங்கினர். பின் மதுரை சென்றார்.