உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காமராஜர்புரத்தில் ரோட்டோர முள் மரங்களால் அவதி

காமராஜர்புரத்தில் ரோட்டோர முள் மரங்களால் அவதி

சிக்கல் : சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி காமராஜர்புரத்தில் சாலையின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மக்கள் அதிப்படுகின்றனர்.சீமைக் கருவேல மரங்களால் இரு புறங்களிலும் வாகனங்கள் செல்லும் போது பயணிப்போர் கைகள், முகம் உள்ளிட்டவைகளில் காயம் ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து வளர்ந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.காமராஜர்புரத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் கூறியதாவது: காமராஜர்புரத்தில் இருந்து சிறைக்குளம் செல்லும் சாலையில் இருபுறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதாலும் சேதமடைந்த சாலையிலும் தொடர்ந்து பயணித்து வருகிறோம். மின்கம்பங்களில் விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது.பொதுமக்களின் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. எனவே கடலாடி யூனியன் தனி அலுவலர் எங்கள் கிராமத்தில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை